டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம் எனவும் ஆங்கில சொல்சுருக்கமான என்கோடு எனவும் அறியப்படும் இந்த பொது ஆராய்ச்சி கூட்டமைப்பு[2] செப்டம்பர் 2003இல் அமெரிக்க தேசிய மனித மரபணுத்தொகுதி ஆராய்ச்சி கழகத்தால் நிறுவப்பட்டது. இதன் இலக்காக மனித மரபணுத்தொகுதியின் அனைத்து செயற்கூறுகளையும் கண்டறிவதாகும்; மனித மரபணுத்தொகைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு தேசிய மனித மரபணுத்தொகுதி ஆராய்ச்சி கழகத்தின் முதன்மையான திட்டமாக இது விளங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக கிடைக்கும் தரவுகள் உடனுக்குடன் பொது தரவுத்தளங்கில் பகிரப்படும்.
செப்டம்பர் 5, 2012 அன்று, இத்திட்டத்தின் துவக்க முடிவுகள் ஒருங்கிணைந்த 30 ஆய்வுத்தாள்களாக இயற்கை, மரபணுத்தொகை உயிரியல், மற்றும் மரபணுத்தொகை ஆய்வு அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டது இந்த வெளியீடுகள் முன்பு “பயனில்லாதவை” எனக் கருதப்பட்ட மனித மரபணுத்தொகையில் குறைந்தது 80% குறிமுறையற்ற ஞிழிகிகள் உயிரியல் செயல்பாட்டுடன் இருப்பதாக காட்டுகின்றன. மனித மரபணுத்தொகையில் 98% வரை குறிமுறையற்ற ஞிழிகிகளாக இருப்பதால் இந்தக் கண்டறிதல் மிகவும் முகனையான ஒன்றாகும்.


