ஆறாம் பண்ணையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆறாம்பண்ணை அரபாத் நகர் ஊராட்சிமன்ற தலைவர் இல்லத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சா.சேக் அப்துல்காதர், வரவேற்றார்.மாவட்ட கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லை வழக்கறிஞர் தினேஷ், மேலப்பாளையம் சாகுல் அமீது, நெல்லை மாமன்ற உறுப்பினர் ரம்சான் அலி, கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், ஆறாம்பண்ணை முகைதீன் பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் அப்துல்கனி, துணைத்தலைவர் எஸ்.எம். அப்துல்கனி, கொங்கராயகுறிச்சி கவுன்சிலர் மைமூன் அப்துல் கரிம், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் கரீம், மருத்துவர் மீனா, கூட்டுறவு வங்கி தலைவர் அய்யாத்துரை பாண்டியன், வி.எ.ஓ ஸ்டீபன் கென்னடி, அரபாத்நகர் பள்ளிவாசல் பொருளாளர் இப்ராகீம், கொங்கராயகுறிச்சி முகைதீன் பள்ளிவாசல் தலைவர் ரகுமத்துல்லா , வார்டு உறுப்பினர் இப்ராகீம், மக்கள் நலச்சங்கம் சையது, மதுரை ஜிகர் தண்டா மீரான், பீர் முகம்மது, ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பகுதி அலுவலர் கண்ணன், சன் செய்தியாளர் தினகரன், நியூஸ் 7 செய்தியாளர் சுடலைமணி செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளை ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக அப்துல் காதர் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அபுல் ஹசன், அபுசாலி, முகமது அலிஜின்னா, இபுராகீம், யூசுப் , வளைகுடா நண்பர்கள் மற்றும் ஊர்பொதுமககள் செய்திருந்தனர்.




