செய்துங்கநல்லூரில் ரயில்வே ஸ்டேஷன் பேவர் பிளாக் சாலை பஞ்சாயத்து தலைவர் திறந்துவைத்தார். செய்துங்கநல்லூரில் ரயில்வே பீடர் ரோடு குறுக்கு தெருவில் பேவர் சலை அமைத்தல் பணி 15 வது நிதிக்குழு மானியம்2 சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு 3,01773/–& என்பதாகும். இந்த சாலையின் பணி துவங்கி தற்போது முடிவுற்றுள்ளது. இந்த சாலையின் திறப்பு விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை தாங்கி சாலையை திறந்து வைத்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஒப்பந்தகாரர் பொன்னையா, வாட்டர் மேன் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவர் கன்னையா அவர்கள் முயற்சியால் இந்த தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த பகுதியில் வீடுகள் பெறுத்துவிட்ட காரணத்தினால் சாக்கடை தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்கு முன்னால் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் முயற்சியில் இவ்விடத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்து உள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோலவே ரயில்வே பீடர் ரோடு பகுதியில் மேலும் உள்ள நான்கு சாலைகளிலும் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


