தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த தினவிழாவை முன்னிட்டு வருகிற 16ம் தேதி 31 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரி கிராமம் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது 252வது பிறந்த தினவிழா (16.04.2023) அன்று கீழ்க்கண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் / மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
தடை செய்யப்பட்ட கடைகள்
1) 10125 பசுவந்தனை ரோடு, பாண்டவர் மங்களம்
2) 9907 பண்ணை தோட்டம்; தெரு, கோவில்பட்டி
3) 9922 இராமசாமி தியேட்டர் அருகில், கோவில்பட்டி
4) 9904 820ஏ, PKR துரைராஜ் நாடார் தெரு, கோவில்பட்டி
5) 9919 பழனி ஆண்டவர்கோவில் தெரு, கோவில்பட்டி
6) 10024 சண்முகா தியேட்டர்அருகில் கோவில்பட்டி
7) 9908 கடலையூர் ரோடு, கோவில்பட்டி
8) 10020 மந்தித்தோப்பு ரோடு, கோவில்பட்டி
9) 9903 பாண்டவர்மங்களம்
10) 9909 AKS தியேட்டர் அருகில், கோவில்பட்டி
11) 10010 ஆனந்தா லாட்ஜ் அருகில், கோவில்பட்டி
12) 10016 லெட்சுமி மில் எதிர்புறம், கோவில்பட்டி
13) 10022 ஆனந்தா லாட்ஜ் அருகில், கோவில்பட்டி
14) 9924 கரடிகுளம் காலணி, கழுகுமலை.
15) 10138 சிவஞானபுரம், எப்போதும்வென்றான்
16) 10009 தளவாய்புரம், கயத்தார் மெயின்ரோடு
17) 9996 செட்டிக்குறிச்சி, கயத்தார்
18) 10046 செட்டிக்குறிச்சி, கயத்தார்
19) 10028 அய்யனாரூத்து
20) 9927 பனிக்கர்குளம் ரோடு, கயத்தார்
21) 9926 கடம்பூர், கயத்தார்
22) 10051 கழுகுமலை பஜார்
23) 10080 பன்னீர்குளம் ரோடு, கயத்தார்
24) 10036 ஓட்டப்பிடாரம் மெயின்ரோடு
25) 10041 புதூர்பாண்டியாபுரம். தூத்துக்குடி
26) 10032 குறுக்குச்சாலை
27) 9906 பசுவந்தனை – கோவில்பட்டி
28) 9923 கடம்பூர்
29) 9917 2/296-1, ராம் நகர், புதியம்புத்தூர்
30) 10021 1/462, குப்பனாபுரம் மெயின் ரோடு, பசுவந்தனை
31) 10047 1/73பு, ஜம்புலிங்கபுரம், ஓட்டப்பிடாரம்
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்நதப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


