கருங்குளம் அருகே வல்லகுளத்தினை சேர்ந்த விவசாயி தங்கபெருமாள். இவர் தனது பூர்வீக நிலத்திற்கு பட்டாவேண்டி கடந்த 6 வருடங்களாக போராட்டி வருகிறார். ஆனால் இவருக்கு பட்டா தாசில்தார்கள் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதற்கிடையில் இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தற்கு , அவரது சொத்து வேறு ஓருவர் பெயரில் பட்டா மாறி இருந்தது. இதுகுறித்து அவர் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சி தலைவர் உள்பட அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தார். இது குறித்த செய்திகள் மாலை மலர் பத்திரிக்கையிலும் இந்தியன் எகஸ்பிரஸ் ஆங்கில பத்திரிக்கையிலும் வெளிவந்தது. ஆங்கில பத்திரிக்கை செய்தியை பார்த்த நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை குறிப்பிட்டு, இவருக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுககுமா? என கேள்வி கேட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் தமிழக முதல்வருக்கும் , தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அவர்களுக்கும் இந்த செய்தியை டிவிட் செய்திருந்தார்.
இதை கண்ட கனிமொழி எம்.பி விவசாயி வல்லகுளம் தங்கபெருமாளுக்கு பட்டா கிடைக்க சப் கலெக்டர் கௌரவ் குமாருக்கும் பரிந்துரை செய்தார். இதனால் அதிரடி நடவடிக்கை எடுத்த சப் கலெக்டர் கௌரவ் குமார் விவசாயி தங்கபெருமாள் மற்றும் வல்லகுளம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகும் படி கடிதம் அனுப்பினார். விவசாயி தங்கபெருமாள் நோயின் காரணமாக வர இயலவில்லை எனவே அவர்சார்பில் அவரது மருமகன் ஜான்ஸ் குமாரும் வல்லகுளம் கிராம நிர்வாக அதிகாரி சக்திவேல் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். அடுத்தகட்ட விசாரணை வருகிற 10 ந்தேதிக்கு ஓத்தி வைத்தார். மேலும் முறைப்படி விவசாயி தங்கபெருமாள் மற்றும் அவரது சகோதரர் கணேசனுக்கு உரிய பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சப் கலெக்டர் கௌரவ்குமார்.
6 வருட காலமாக சொந்த சொத்து பாட்டாவுக்காக போராடிய விவசாயி தங்கபெருமாளுக்கு உதவிய பத்திரிக்கைகள் மாலை மலர் இந்தியன் எகஸ்பிரஸ், நடிகை கஸ்தூரி, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சப் கலெக்டர் கௌரவ் குமார் ஆகியோருக்கு விவசாயி தங்க பெருமாள் நன்றி கூறினார்.


