தூத்துக்குடி பழைய துறைமுகம் எதிரே உள்ள தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் விண்ணபத்துடன் ஆதார் கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல் ( குடும்ப ரேஷன் கார்டு), அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆகியவற்றுடன் இன்று தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பலரும் மாற்ற திறனாளியாக இருந்த காரணத்தினால் மூன்று சக்கர வாகனத்தில் வந்தனர். சிலர் ஆட்டோவில் வந்த இறங்கினர். இதனால் மாடியில் இருந்த சப்கலெக்டரை பார்த்து அவர்களால் மனு கொடுக்க இயலவில்லை. இதற்கிடையில் மாடியில் இருந்த சப் கலெக்டர் கௌரவ் குமார், கீழே இறங்கி வந்து வாசலில் வைத்தே அவர்களிடம் மனுக்களை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் எந்ததெந்த பகுதியில் இலவச வீட்டுமனைபட்டா வழங்கினால் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் கேட்டு அறிந்து கொண்டார்.
சப்கலெக்டர் நினைத்திருந்தால், உதவியாளர்களை வைத்தே மனுவை பெற்று இருக்கமுடியும். ஆனாலும் நேரில் வந்ததோடு மட்டுமல்லாமல் மாற்று திறனாளிகளை கஷ்டபட விடாமல் வாசலில் வைத்தே மனுவாங்கிய சப்கலெக்டரை மாற்றுதிறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.


