222. முன்னீர் பள்ளம் ஊராட்சி பற்றிய முன்குறிப்பு
முன்னீர்பள்ளம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங் கோட்டை வட்டாரத்தில் அமைந்து ள்ளது. இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல் வேலி மக்களவைத் தொகுதிக் கும் உட்பட்டதாகும். இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக ஞானதிரவியமும், சட்டமன்ற உறுப்பினராக ரூபி மனோகரனும் உள்ளனர்.
இந்த ஊராட்சியில், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6436 ஆகும். இவர்களில் பெண்கள் 2983 பேரும் ஆண்கள் 3453 பேரும் உள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப் பட்டுள்ளது. விக்கிபீடியாவில் இருந்து அந்த தகவலை எடுத்து தங்களிடம் தருகிறேன்.
இவ்வூரில் குடிநீர் இணைப்புகள் 687, சிறு மின்விசைக் குழாய்கள் 8, கைக்குழாய்கள் 18, மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் 17, தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், உள்ளாட்சிக் கட்டடங்கள் 30, உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4, ஊரணிகள் அல்லது குளங்கள் 10, விளையாட்டு மையங்கள் சந்தைகள்18, ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49, ஊராட்சிச் சாலைகள்4, பேருந்து நிலையங்கள் 16, சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 26. என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2013ல் இதன் மாற்றங்கள் எப்படி இருக்கிறது என காணவேண்டும். அதற்காகத்தான் பயணத்தினை துவங்க உள்ளேன்.
ஜல்ஜீவன் அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக் கும் இப்போது தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சிக்குள் 7 சிற்றூர்கள் அமைத்துள்ளது. இதன் விவரம் வருமாறு-
சக்தி நகர், ஆரைகுளம், மேலமுன்னீர்பள்ளம், மீனம் மாள்புரம், முன்னீர்பள்ளம், புதுக்கிராமம், மருதம் நகர், லெட்சுமி நகர், மணி நகர், அன்னை நகர், பொட்டல் பச்சேரி, திருநெல்லை நகர்
செல்வி நகர், ஆரைகுளம் வடக்குத் தெரு, அரோமா நகர், ஜோதிபுரம், ஜே.ஜே. நகர், செல்லதுரை நகர், மெதாராத்தாள் நகர், தனலட்சுமி நகர், ஜி.சி.பி நகர், அன்னை நகர் காலனி.
இந்த ஊரை பொறுத்தவரை பெரிய சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளது. இதன் எல்கையாக ஒரு புறம் தாமிரபரணியும் , மறுபுரம் நெல்லை & நாகர்கோயில் பைபாஸ் சாலையும், மேற்கே தருவை கிராமமும், கிழக்கே மேலக்கருங்குளமும் உள்ளது.
இந்த ஊரின் நடுவில்தான் மேலப்பாளையம் & சேரன்மகாதேவி சாலை செல்கிறது. ஊரில் பழைமையான காவல்நிலையம் உள்ளது.
முன்னீர் பள்ளத்தில் பாண்டியராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மேல முன்னீர்பள்ளம் வழியாக செல்லவேண்டும். இந்த கோயிலும் மிகச் சிறப்பான தானதுதான். இந்த ஊரில் அம்மன் கோயில்கள் ஊர் கோயிலாக முப்பிடாதி , சந்தன மாரியம்மன் கோயிலும் உள்ளது.
இந்த ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கு தனித்தனியாக குடும்ப கோயில்கள் உள்ளன. காவல் தெய்வமான சுடலை மாட சுவாமி கோயில்கள் மிக அதிகமாக காணப்படுகிறது. சுடலை ஆண்டவர் பிடிமண் எடுத்து பாசமாக யார் அழைத்து சென்றாலும் பின் சென்று அருள்புரிவார். அந்த வகையில் முன்னீர் பள்ளத்தில் உள்ள சுடலை கோயில் வரலாற்றையும் ஆவணப் படுத்த வேண்டியது உள்ளது.
ஊரில் இடது புறமாக பாளையங் கால்வாய் பாய்க்கிறது. இந்த கால்வாய் பாசனம் தாமிர பரணி ஆற்றங்கரை வரை மிக அதிகமாக காணப்படுகிறது.
முன்னீர் பள்ளத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. மேல முன்னீர் பள்ளத்தில் இந்து துவக்கப் பள்ளியும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆரைக்குளத்தில் முத்தமிழ் பப்ளிக் ஸ்கூல் தற்போது துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
தற்போது மிக அதிகமான குடியிருப்புகள் உருவாகி வருகிறது. பெரும்பாலுமே ஆரைக்குளம் அருகில் இருந்து பைபாஸ் சாலை வழியாக செல்லும் இடத்தில் இருபுறமும் மிக அதிகமான புது குடியிருப்பு உருவாகியுள்ளன. பத்திரிக்கை நிருபர்களுக்கு தமிழக அரசு வழங்கிய குடியிருப்புகளும் இந்த இடத்தில் தான் உள்ளன.
அதோடு மட்டுமல்லாமல் நாக ர்கோயில் ரயில்வே பாதையும் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்துக்கு நடுவில் தான் செல்கிறது. இந்த பாதை செல்லும் இடத்தில் மிகப்பெரிய விபத்து ஒன்று நடந்துள்ளது. அதன் தேதியை விசாரித்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய விபத்தில், உயிர் பலி குறைவாக ஏற்பட இவ்வூரில் உள்ள இசக்கியம்மன் தான் காரணம் என இவ்வூரை சேர்ந்த ஆண்டி என்பவர் கூறினார்.
எனவே அந்த கோயில் வரலாற்றை குறித்து காண வேண்டியது உள்ளது.
முன்னீர் பள்ளத்தில் மிகவும் முக்கியமான ஊர் ஆரைக்குளம். இந்த ஊரில் கிறிஸ்தவ, இந்து மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவ்வூரை சேர்ந்த அந்தோணி என்பவர் விஜய் டிவியில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மெர்குரி நிறுவனத்தின் இயக்குனர் ஆவார்.
மும்பை போன்ற பகுதியில் ஆரைக்குளத்தினை சேர்ந்தவர்கள் தொழில் செய்வதில் கொடிகட்டி பறக்கிறார்கள். இந்த ஊரில் ராமசந்திர ஆதித்தனார் கட்டிகொடுத்த சங்கம் ஒன்றும் உண்டு.
ஆரைக்குளத்தினை பொறுத்தவரை சாத்தான்குளம் பகுதியில் இருந்து ஒருவர் இங்கு குடியிருக்க வந்தாகவும், மிகவும் காடு போன்று இருந்த இடத்தில் குடிசை கட்டி வாழ்ந்தாகவும், அவருக்கு பிறந்த வாரிசுகளே இந்த ஊரில் தற்போது வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் உருவாக்கிய கோயில் ஆதி அம்மன் என்றும் கிழவி அம்மன் கோயில் என்றும் போற்றப்படுகிறது.
கிழவி அம்மன் தான் அந்த நபரின் மனைவிக்கு பேறுகாலம் பார்த்தார். “நான் அம்மன் என்னை பிரதிட்சை செய்து வணங்கு. வேண்டிய வரம் தருகிறேன். உன் ஒரு குடியை 100 குடியாக மாற்றிக்காட்டுகிறேன்” என்று கூறினாராம்.
அதன் படியே இவ்வூர்பெருகியுள்ளது. இவ்வூரில் ஊய்க்காட்டான் கோயில், முத்தாரம்மன்கோயில், பெருமாள்சாமி கோயில், இசக்கியம்மன் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட பல கோயில் கள் உள்ளன.
கிறிஸ்தவ கோயிலில் ஆர்.சி. கத்தோலிக்க கோயில், சி.எம்.எஸ், சி.எஸ்.ஐ கோயில்கள் உள்ளன. வானுயரந்த கோபுரத்துடன் இந்த கோயில்கள் மிகப்பிரமாண்டமாக உள்ளது.
தொடர்ந்து முன்னீர் பள்ளம் பஞ்சாயத்து வரலாறு குறித்து காணலாம்.


