திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவர்கள் இன்று தென்மாவட்டத்திற்கான ரயிவே துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்து இன்றையதினம் தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களை சந்தித்து மக்கள் பயன்பெறும் வகையில் கோரிக்கை மனு அளித்தபோது உடன் மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி மற்றும மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வைக்கபட்ட கோரிக்கை பின்வருமாறு.
வந்தே பாரத் ரயில் சேவை திருநெல்வேலி முதல் சென்னை வரை தொடங்கபட வேண்டும், திருநெல்வேலி ரயில் நிலையம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு புதியபொலிவுடன் அமைக்கபட வேண்டும், திருநெல்வேலில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லபட வேண்டும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணகுடி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லபட வேண்டும், கடம்பூர் ரயில் நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் மக்களின் நலனுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்கும், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கும் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மனு அளிக்கபட்டது.


