ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர் முனியசாமி அவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட பெண் குழந்தைகளின் தற்காப்பு கராத்தே பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தற்காப்பு கராத்தே பயிற்சி வகுப்புகள் சிவராமகிருஷ்ணன் மற்றும் ராம்குமார் ஆகிய கராத்தே மாஸ்டர்களால் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன பெண்கள் பெண் குழந்தைகளுக்கு இதனால் தன்னை காத்துக் கொள்ளக்கூடிய திறமை சவால்களை எதிர் நோக்கும் மனப்பாங்கு தன்னம்பிக்கை தைரியம் ஆகிய திறன்கள் வளர்க்கப்படுகின்றன கராத்தே பயிற்சியின் முடிவில் மாணவியர்களுக்கு சத்தான கடலை மற்றும் சுண்டல் ஆகியவை வழங்கப்படுகின்றன இந்த வாழ்வியல் திறன் பயிற்சி ஆனது பெண் குழந்தைகளுக்கு மிக பயனுள்ளதாக அமைவதாக பெண் குழந்தைகள் கூறினர் .கராத்தே மாஸ்டர் கொடுக்கும் பயிற்சிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் வெயில் முத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன் சிவசங்கரி வேகம் மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் பார்வையிட்டனர்.


