தூத்துக்குடியில் மார்ச் 25, 26ம் தேதிகளில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் மகளிர்கள், வாழைநாரில் இருந்து இயந்திரம் மூலம் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணியினை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நாளை 25.03.2023 அன்று காலை 9.30 மணிக்கு துவக்கி வைக்கிறார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வ.உ.சி. கலைக் கல்லூரியில் நடைபெறும் சிறுபான்மை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
முத்தையாபுரம், சத்யாநகர், பத்திநாதபுரம் மற்றும் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியினை காலை 11.30 மணிக்கு இயக்கி வைக்கிறார்கள். மாலை 4.30 மணிக்கு மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்கள். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் அமைந்துள்ள போன் செக்கர்ஸ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் 2வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
மேலும், 26.03.2023 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். மாலை 5.00 மணிக்கு மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்கிறார். எனவே பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


