பேய்க்குளம் பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென ஆலங்கட்டி மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், கருங்கடல் பகுதியில் திடீரென மழை பெய்தது. அப்போது சுமார் 10 நிமிடம் சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பொழிந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், மற்றும் பெரியோர்கள் பனிக்கட்டியை கையில் எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து தூறலுடன் மழை பொழிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். பேய்க்குளம் பகுதியில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


