கொங்கராயகுறிச்சி ஹமீதியா அரசு உதவி பெறும் துவக்கபள்ளியில் விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் ஹமீதியா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதனை முன்னிட்டு 4ம் மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் கண்காட்சி, உணவுத்திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிக் துவக்க உரையாற்றினார். ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் துணைத்தலைவர் சாகுல், ஹமீது பள்ளி அறக்கட்டளை செயலாளர் அப்பாஸ், பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையாளர் மீரான் சாஹிப் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அலியார், ஜாஹிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


