சிகரம் அறக்கட்டளை சார்பில் செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக சிறுதானிய ஆண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். சிகரம் இயக்குனர் முருகன் சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அதிலுள்ள சத்துக்கள் , கலோரிகள் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


