Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம், செய்துங்கநல்லூர், இராமானுஜம்புதூர் உள்பட பல்வேறு பகுதியில் திடிரென மதியம் 2 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றது.
வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


