புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக கீழச்செக்காரகுடி கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடந்தது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கீழச்செக்காரக்குடி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் நான்காம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
இந்த கபடி போட்டிக்கு ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணன் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை டிராகன் வாரியர் பி அணியும், இரண்டாம் பரிசை புதியம்புத்தூர் முருகன் நினைவு கபடி அணியும், மூன்றாம் பரிசை டிராகன் வாரியர் சி அணியும், நான்காம் பரிசை அகிலம்புரம் இளைஞர் கபடி அணியும் பெற்றது.
முதல் பரிசான ரூபாய் 10000 மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார். இரண்டாம் பரிசு 8000 மற்றும் கோப்பையை கருங்குளம் ஒன்றிய துணை சேர்மன் லட்சுமண பெருமாள் வழங்கினார்.
கபடி போட்டியில் விளையாடிய அணிகளுக்கு ஆடைகளை பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பையாவும், விளையாட்டு உபகரணங்களை வடக்கு காரசேரி மாடசாமியும் அன்பளிப்பாக வழங்கினார்.


