திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் , நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மற்றும் சுற்றுலா குழு சார்பில் மரபு நடைபயணம் நடந்தது. இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, அம்மன்புரம் அருஞ்சுனை காத்த அய்யனார், தேரிக்குடியிருப்பு ஆகிய பகுதியில் பயணம் செய்தனர். இந்த பயணத்துக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற திருநெல்வேலி மாவட்ட மைய நல் நூலகர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆதிச்சநல்லூரில் இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தொல்லியல் ஆய்வாளர் அருண் ஆகியோர் விளக்கமளித்தனர். மத்திய தொல்லியல் துறையை சேர்ந்த வினித் உள்படபலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நல்லதை பகிர்வது நம் கடமை குழுவை சேர்ந்த மு.வெ.ரா, சுரேஷ், சிவ நடராஜ், விஜயலெட்சுமி உள்பட பலர் செய்திருந்தனர்.


