எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், வரலாற்றாய்வாளர், நாடக ஆசிரியர், சினிமா நடிகர் எனப் பல பரிணாமத்தில் பயணித்துக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேருந்து நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கியவர். 1986 ல் தேவி வார இதழில் துணுககு எழுத்தாளராக அறிமுகமானவர். தற்போது 3000 மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடங்களில் எழுதி 65 நூல்களை எழுதி முடித்துள்ளார்.
”நவீன தாமிரபரணி மஹாத்மியம்” என்ற பெயரில் உலக நதிகளில் முதல் முதலாக க் யூ ஆர் கோடு மூலமாக வீடியோ பார்க்கும் வசதியை கொண்டு எழுதிய நூல். இந்த நூலை வேளாக்குறிச்சி ஆதினத்தின் உதவியுடன் தாமிரபரணி மகா புஷ்கரம் அன்று வெளியிட்டார்.
தாமிரபரணி நதிக்கரை நாகரிகமான ஆதிச்சநல்லு£ர் நாகரிகத்தை வெளிக்கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்து வெற்றிப்பெற்று தந்தவர். மூன்று நூல்கள் ஆதிச்சநல்லூர் பற்றி எழுதியுள்ளார்.
இவரது பணிகளை பாராட்டி தமிழக அரசு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கியது. நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் தமிழ் ரத்னா விருதை பெற்றார். திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய “தமிழ்க்கலைசெல்வர்” விருது காஞ்சி மடம் வழங்கிய “தண்பொருநை கலைச்செல்வர்” விருது. வேளாக்குறிச்சி ஆதினம் தனது மணிவிழாவில் விருதும் 5ஆயிரம் பொற்காசும் வழங்கினார். 11 வது உலக மாநாட்டில் இவரது நூலான தென்பாண்டிச்சீமையிலே பாகம்&1 5 ஆயிரம் பரிசை வென்றது. பாரதி கலை இலக்கிய மன்றம் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் அளித்த நாட்டுப்புறவியல் மேதை விருது, மற்றும் தமிழ்மாமணி விருது, பொருநை புதல்வன், பதிவுச்செம்மல் விருது, எஸ்.டி.ஆதித்தனார் விருது, எழுத்து சித்தர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
விகடன். தி தமிழ் திசை இந்து, தினத்தந்தி, தினகரன்( சூரியன் பதிப்பகம்), காவ்யா, பொன்சொர்ணா என முன்னணி பதிப்பகத்தில் நூல் எழுதிய இவருக்கு தினமலர் ( தாமரை பிரதர்ஸ் மீடியா) “வரங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர்” நூல் மணி மகுடமாய் சிறப்பை தந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் அவர்கள் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இவரது களப்பணியில் உருவான “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” நூலை மாவட்ட நிர்வாகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
உலக களரி கூட்டமைப்பு (அமெரிக்கா) மூலமாக களரி அடிமுறை பாகம் 1 என்னும் முழுமையான கலர் நூலை எழுதிய இவர் தொடர்ந்து பல பாகங்கள் எழுத ஆயத்தமாகி வருகிறார்.
ராட்டினம் தங்கசாமியின் “எட்டுத்திக்கும் மதயானை”, நடிகை ரோகிணி இயக்கிய “அப்பாவின் மீசை”, இப்பராகீம் ராவுத்தர் தயாரிப்பில் தம்பி இப்பராகீம் இயக்கிய “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” ஆகிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது நூல்கள் 65 ம் தாமிரபரணியை பற்றியே உள்ளது. குறிப்பாக தலைத்தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், நெல்டலை துறை முகங்கள், சித்தர்களின் சொர்ககபுரி பெதிகை மலை, அத்ரி மலை யாத்திரை, எனது பயணங்கள், நெல்லை வரலாற்று சுவடுகள், சிங்கம்பட்டி ஜமீன் கதை, ஜமீன் கோயில்கள் , நவீன தாமிரபரணி மகாத்மியம், அருள்தரும் அதிசய சித்தர்கள், தென்னாட்டு ஜமீன்கள், வளங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர், தவழ்ந்து வரும் தாமிரபரணி, பொருநை ஆதிச்சநல்லூர் அறிககைகளும் அருங்காட்சியகங்களும், பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் &1 , பாகம் 2 , நெல்லைககோயில்கள் உள்பட பல நூல்கள் தாமிரபரணி புகழ்பாடிய படியே உள்ளது.
இவர் தாமிரபணியின் கரை வழியே கடந்த 25 வருடகாலமாக நடந்துவந்து முதல் பாகமாக 1000 ம் பககத்தில் தலைத்தாமிரபரணியை எழுதி முடித்துள்ளார். பொதிகை மலையில் இருந்து மேலச்செவல் வரை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இடைத் தாமிரபரணி , கடைத்தாமிரபரணி வெளிவரவுள்ளது. இரு நூலை எழுதி முடிககும்போது இவர் தாமிரபரணி கடலில் கலககும் புன்னகாயலை வரை நடைபயணமாக சென்றுமுடிப்பார்.


