ஸ்ரீவைகுண்டம் அருகே அப்பன்கோவில் திருவேங்கடத்தப்பன் கோயிலில் கருடசேவை நடந்தது.
நவதிருப்பதி கோவில்களில் அருகில் அமைந்துள்ள சுவாமி நம்மாழ்வார் பிறந்த அப்பன் கோவிலில் கருடசேவை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அப்பன்கோவில் சுவாமி நம்மாழ்வார் பிறந்த ஊர். இந்த ஊரில் சுவாமி திருவேங்கடத்தப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று 5 நாட்கள் உற்சவம் நடக்கிறது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 7 மணிக்கு திருமஞ்சனம் 8.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி முன்மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடந்தது. தீர்த்தம் மஞ்சள் கயிறு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி திருவேங்கடத்தப்பன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் மாட வீதி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் அரையர் சுவாமிகள் சம்பத் சாரங்கன், திருவாய்மொழிப்பிள்ளை சுவாமி ஸ்ரீதர், ஆத்தான், கீழத்திருமாளிகை சுவாமி ராமானுஜம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


