செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
செய்துங்கநல்லூர் உதவி மின் அலுவலகம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெய்துண் பீவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் 160 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


