கருங்குளம் வட்டார வள மையத்தில் புதிய பாரத இயக்கம் சார்ந்த வாழ்வியல் திறன் பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி வழி காட்டுதலின் பேரில், மாவட்டத் திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், வட்டார கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், மரிய ஜெயசீலா ஆலோசனைப்படி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் வாழ்க்கைத் திறன் ஒரு நாள் பயிற்சி நடந்தது.
பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் மாரிமுத்து, கருங்குளம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் கல்யாணி, கருங்குளம் தபால் நிலைய அலுவலர் ராஜலட்சுமி, கருங்குளம் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், சர்பின் மற்றும் செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் அனந்த முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் போது சட்டம் சார்ந்த கல்வி அறிவு, சொத்துக்களை பாதுகாப்பது, முதியோர் பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், குழந்தைகளுக்கான நோய் தடுப்பு முறை, ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள், பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காத்துக் கொள்ளும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து, ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ், மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.


