தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு வல்லநாடு சித்த மருத்துவ பிரிவின் சார்பில் சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இன்று (11.03.2023) வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி மற்றும் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் ஆகியோர்கள் இணைந்து காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் பேசுகையில், நமது கருங்குளம் வட்டாரத்தில் 43 காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரு நோயாளிகளின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் வழங்கிய ஒரு மாதத்திற்கு தேவையான சத்துணவு பொருட்கள் இப்போது வழங்கப்பட்டது. சத்துணவு பொருட்களை வழங்கிய சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் அவர்களுக்கு பொது சுகாதாரத்துறை மற்றும் காசநோய் ஒழிப்புத்துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
இறுதியாக சித்த மருத்துவ மருந்தாளுநர் திரு.வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் ஆய்வக நுட்பனர் திருமதி.ராஜேஸ்வரி, நம்பிக்கை ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள் மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.


