அன்றில் முற்றம் என்ற தலைப்பில் இருபது பெண் எழுத்தாளர்கள் எழுதிய இருபது கதைகளின் தொகுப்பு நூல் இன்று, ( 08:03:2023) மிக விமரிசையாக, நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வெளியிடப் பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் Dr. D.எஸ்தர் தலைமையுரை ஆற்றினார்.திரு.G.ஜெரினா பபி அவர்கள் சிறப்புரையாற்றினார்.நூலை சமூகச் சேவகி Dr ஜெயாஸ்ரீதரன் வெளியிட திருமதி.C.சுசிலா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இப்புத்தக வெளியீடு நிகழ்வை மகளிர் அதிகாரம் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அறக்கட்டளையின் தலைவர் Dr. சுபத்திராசெல்லதுரை முன்னின்று நடத்தினார். இந்நூலின் தொகுப்பாளர் பேராசிரியர் ஜோஸ்பின் பாபா அவர்கள் நூலறிமுகம் செய்தார்,குமரி உத்ரா மகளிர் தின சிறப்புக் கவிதை வாசித்தார், ஜாண்சிபால்ராஜ் , கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்தார் .எழுத்தாளர்கள் த.ஜாண்சிபால்ரஜ்,சுபத்ரா செல்லதுரை, தி.வள்ளி, குமரி உத்ரா,சப்திகா, உமா கண்ணன், வசந்தா லெக்க்ஷ்மண் சி.ஆன்சி மோள், ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


