நெல்லை பொருநை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் சிற்பி பாமா எழுதிய கல்வெட்டு உளவியல் மர்ம நாவல் வெளியிடப்பட்டது.
பொருநை இலக்கிய வட்டத்தின் காப்பாளர் தளவாய் நாதன் வெளியிடப் பேராசிரியர் முனைவர் குரு. Êசண்முகநாதன் பெற்றுக்கொண்டார். நூலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை’கழக பேராசிரியர் முனைவர் சுதாகர், தூய சவேரியார் தமிழ்த்துறை பேராசிரியர் ரில்பர்ட் ஜனார்த்தனன் ஆகியோர் திறனாய்வு செய்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கவிஞர் பாப்பாககுடி இரா.செல்வ மணி, கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், தேசிய நல்லாசிரியர் சு. செல்லப்பா, கவிஞர் சு. முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நல் நூலகர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். எழுத்தாளர் நாறும்பூ நாதர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் சிற்பி பாமரா ஏற்புரை வழங்கினார். மா. வெற்றி பாண்டியன் நன்றி கூறினார்.


