பனங்கள்ளில் 18 வகையான கொழுப்பு அமிலங்களும் , 26 அமினோ அமிலங்களும், வயிறு மற்றும் குடல் நலனுக்கு உகந்த சிறுவாழூண்களும் உள்ளது என்பதை ஐதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர். இவை புற்றுநோய் சிகிட்சைகளிலும் பலனளிக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பிற்கும், மருத்துவ சிகிட்சைக்காகவும் பனங்கள்ளைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
கேரளாவில் ஆப்பம் தயாரிக்கவும், கர்நாடகாவில் இட்லி/தோசைக்கும், வட மாநிலங்களில் சப்பாத்தி/ரொட்டி தயாரிக்கவும், ஆந்திராவில் அசைவ உணவு தயாரிப்பிலும், இயற்கை நொதிப்பானாகக் “கள்” மக்களுக்கு பயனளிக்கிறது.
உன்னதமான உணவுப் பொருளான கள்ளுக்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பது என்பது, உண்மையில் வேதனைக்குரியது, வெட்கப்படவேண்டியது…!
#கள்நமதுஉணவின்ஒருபகுதி!#கள்நமது_உரிமை
இவண்.
பாரம்பரிய தமிழகம்


