ஆறாம்பண்ணையில் சதக்கப்துல்லா அப்பா கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அப்துல் வகாப் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் பெண்கள் சிறப்பு முகாம் ஆறாம்பண்ணை, அரபாத்நகர், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இதன் துவக்கவிழா ஆறாம்பண்ணை பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது. கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை வகித்தார். துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். எழுத்தாளர்முத்தாலங் குறிச்சி காராசு உள்பட பலர் பேசினர். திட்ட அலுவலர் செய்யது அலி பாத்திமா வரவேற்றார். முனைவர் மாரியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பஞ்சாயதது தலைவர் சேக் அப்துல் காதர், பள்ளி வாசல் தலைவர் இமாம் அலி, செயலாளர் அப்துல் கனி, தலைமை இமாம் கம்ருத்தீன், துணைத்தலைவர் அப்துல் கனி, பத்திரிக்கையாளர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திட்ட அலுவலர் முனைவர் கீதா நன்றி கூறினார்.


