திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள நாலாயிர முடையார் குளம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் இவரது மனைவி முத்து இசக்கி (36). ஜோசப் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த முத்து இசக்கி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


