தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராமையா (58). விவசாயி. இவர் இன்று தனது பைக்கில் கருங்குளம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகாசியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ராமையாவை, அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த சிவகாசி காயம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சைக்கனி மகன் கமலக்கண்ணன் (63) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


