தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் செல்போன் டவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் செல்போன் டவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என இதுவரை 4முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. செல்போன் டவரால் புற்று நோய், மரபணுதாக்கம், அதிக தலை வலி, பார்வைக்கோளாறு, மூளைக்கட்டி, கை-கால் நடுக்கம், வலிப்பு நோய், தூக்கமின்மை போன்ற பாதுப்புகள் ஏற்படும் என்பதால் செல்போன் டவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முனியசாமி கோவில் தெரு, வாதிரியார் தெரு வரத விநாயகர் கோவில் தெரு, பெரியார் நகர், முஸ்லிம் தெரு, தொப்புத் தெரு, அருந்ததியர் தெரு பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


