செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தொழிலதிபர் ஓ.பி. முஸ்தபா தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் மின்வாரியம் இளநிலைபொறியாளர் சுரேஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நிர்வாகி ரகுமத் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஜீனத், செய்யது முகம்மது, ரகுமத்துல்லா, மாலிக் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


