வல்லநாட்டில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு கிராமத்தில், வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தன்னார்வலர்கள் குழு தொண்டர்குலம் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து, வல்லநாடு ஸ்ரீதம்பிராட்டி அம்மன் திடலில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர் துரை தலைமை வகித்தார். வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் தன்னார்வலர்கள் குழு நிர்வாகிகள் பாலசுந்தர விநாயகம், பூல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, விழி ஒளி பரிசோதகர் பிரம்மாட்சி, கண் சிகிச்சை முகாம் மேலாளர் சுப்பிரமணியன், சுந்தரேசன், ஸ்டார் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் கொம்பையா , யுவகேந்திரா பார்வர்ட் பிளாக் மூத்த தலைவர் மருதுபாண்டியன், வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், கவுன்சிலிங் டாக்டர் ராமலட்சுமி ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளைஎழுத்து பிரச்சனை, தலைவலி, சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, கண் கண்ணாடி அணந்தவர்கள், கண் புரை நோய் உள்ளவர்கள் ஆகியோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் கண்ணாடி தேவைபடுபவர்களுக்கு பிளாஸ்டிக் லென்ஸிலான கண் கண்ணாடி குறைந்த விலையில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மேலபுத்தனேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், பழனிச்சாமி, விநாயகர் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் முருகன், ஹோட்டல் மாதவிலாஸ் ராமு, ஆட்டோ இசக்கி, கந்தன், முத்துவேல், சுப்பிரமணியன், தம்பான், சிதம்பரம், ஜோதி, கல்லத்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் தன்னார்வலர்கள் குழு இளைஞர்கள் செய்திருந்தனர்.


