தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 3பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். நேற்று பிற்பகல் சோரீஸ் புரம் பகுதியில் வைத்து அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி சின்னதோப்பு கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (25), நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கீழகடையம் காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (30) ஆகிய 3பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


