தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து கடந்த 18-ம் தேதி சிவராத்திரி அன்று
அதிகாலை 5.00 மணிக்கு ஏரல் விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன்
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன்
கவிஞர் ஏரல் ராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் அத்ரிமலை பயணம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஏரல் ராஜன் என்பவர் கூறுகையில்,
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடி
நவகைலாசத்தில் முதன்மை கோவிலான கைலாசநாதரை வணங்கினோம். அடுத்ததாக
சிவசைலம் என்ற பழமையான ஆலயத்தை வணங்கி, அதிலிருந்து
சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள
கடனாநதி அணைக்கட்டில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அணையின் ஊடாகவும்
அடர்ந்த கானகத்தின் ஊடாகவும் நடந்து தெள்ளத்தெளிவான நீரோட்டம் கொண்ட காட்டாற்றில் நீராடி மீண்டும் பயணித்து
பல பறவைகளின் சத்தங்களைக் கேட்டபடி
சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து
அத்ரி பரமேஸ்வரர் கோவிலை அடைந்தோம். அங்கு
மூன்றடி அகலத்தில் தீர்த்தமாக ஒரு சிறு ஊற்று நீரோடையில் நீராடி பூஜையில் கலந்து கொண்டோம்.
கொண்டுச் சென்ற பூ,எண்ணெய்,
சூடம்
மற்றும் பூந்தி வைத்து வணங்கி
பூந்தியை எங்களைப் போல் வந்த சுமார் நூற்றைம்பது பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், கீழ் இறங்குகையில் சற்று அருகே ஒரு சிறு இஸ்லாமிய ஸ்தலமுள்ளது.
அங்கேயும் சில இஸ்லாமியர்கள் குடும்ப சகிதம் வந்திருந்தனர்.
எங்களை அன்போடு வரவேற்று விபூதி போன்றொன்றை தந்தனர்.
பின்னர்
வனத்துறை அதிகாரிகளிடம் வந்ததை எண்ணி தெரிவித்து விட்டு
பொட்டல் புதூர் என்ற அருகாமை ஊருக்கு பயணித்து தேனீர் அருந்திவிட்டு அங்குள்ள
கோவில் போன்ற கருங்கல் கட்டுமானத்திலுள்ள பள்ளிவாசல் சென்றோம்.
அங்கு பல மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமாகும் ஸ்தலமென அங்குள்ள இஸ்லாமிய ஆன்மிக பெரியோர்கள் கூறினார்கள்.
எல்லோரும் வழிபாடு செய்கின்ற சமத்துவத் தன்மை இருந்தது
அங்கேயும் விபூதி போன்றொன்றை பூசினார்கள். அடுத்து
நெல்லை வந்து
நெல்லையப்பரை வணங்கினோம். நெல்லை கோவிலில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து பயணத்தை முடித்து கொண்டு இரவு 8.30 மணிக்கு ஏரல் நோக்கி பயணித்து வந்தோம் என்று கூறினார்.


