தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் தங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி புத்த நகல் மற்றும் வைப்புத்தொகை ரசீது நகல் ஆகியவற்றுடன் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் மூலமும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற்று கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவகம் (0461-2325606), தூத்துக்குடி என்ற முகவரியை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


