தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வாரச்சந்தையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாசரேத், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் திசையன்விளை போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய வருகை தருவார்கள். அதே போல் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த கருங்குளம், கொங்கராயகுறிச்சி, நாட்டார்குளம், வசவப்பபுரம், வல்லநாடு, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக பொருட்கள் வாங்க வருகை தருவார்கள்.
இந்த வாரச்சந்தை இதுவரை காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இயங்கி வந்தது. தற்போது இதன் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வருகின்ற 22ம் தேதி நடைபெறும் புதன்கிழமை வாரச்சந்தை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் இந்த நேரமே வாரச்சந்தை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


