புல்வாமா தாக்குதல் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியிா்கள் பேரணியாக மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை இந்திரா, தன்னார்வலர் ஐயப்பன்,கிளைச் செயலாளர் காளியப்பன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்..


