ஆதிச்சநல்லூரில் சதக்கப்துல்லா அப்பா கல்லூரி சார்பில் தொல்லியல் கள ஆய்வு நடந்தது.
சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் தொல்லியல் கள ஆய்வு நடந்தது. சுமார் 150 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.கே. அப்துல் காதர் கல்லூரி வளாகத்தில் இருந்து வழி அனுப்பி வைத்தார். துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ செய்யது முகமது காஜா வாழ்த்துரை பேசினார். வரலாற்று துறை தலைவர் முனைவர் நசீர் அகமது தலைமையில் மாணவர்கள் ஆதிச்சநல்லூர் சிவகளை, திருக்கோளூர், காயல்பட்டினம் ஆகிய பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆதிச்சநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் மாணிக்கம் ஆகியோர் விளக்கமளித்தார்.
திருக்கோளூரில் ஆய்வாளர் யத்தீஸ் குமார் மாணவ மாணவிகளுக்கும் விளக்கம் அளித்தார். அதன் பின் காயல் பட்டினம் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் முகைதீன் பாதுஷா, முனைவர் அப்துல் அஜீஸ், முனைவர் ஜெமி மெர்லின் ராணி, முனைவர் சாகுல் அமீது, முனைவர் ஆஷா, முனைவர் அப்துல் கலாம், மு¬வைர் செய்தலி, முனைவர் சமீலி, முனைவர் அட்சல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


