தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது.
மேலும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


