தூத்துக்குடியில் ஜெராக்ஸ் கடையில் கேமராவைத் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் தாளமுத்துநகா் அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் வேல்முருகன் (46). தாளமுத்துநகா் அன்னை வேளாங்கண்ணி நகா் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். கடந்த டிசம்பா் 9-இல் இவரது கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபா்கள், அங்கிருந்த கேமராவை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் தாளமுத்துநகா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த அமல்ராஜ் மகன் விமல்ராஜ் (19), திரேஸ்புரம் சங்குகுழி காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் கதிரவன் (19) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, கேமராவையும் பறிமுதல் செய்தனர்.


