திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை சுயநிதி பிரிவு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்தும் “அகழாய்வில் அகழ்ந்த ஆதித்தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு தெற்கு கள்ளிகுளம் கல்லூரி டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் வைத்து நடந்தது. கல்லூரி செயலர் , தாளாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மேஜர் டி ராஜன் முன்னிலை வகித்தார். சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் மயிலாடும் பாறை குறித்து திருநெல்வேலி அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அவர்களும், ஆதிச்சநல்லூர் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும் பேசினர்.தமிழ்த்துறை சுயநிதிபிரிவு துறைத்தலைவர் கிரிஜா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முருகவேல் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு துறைத்தலைவர் கிரிஜா, ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முருகவேல் உள்பட தமிழ்த்துறை சுயநிதி பிரிவினர் செய்துதிருந்தனர்.


