கடந்த ஆண்டு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வெளியே வந்தேன். ஆனாலும் நிறைய நல்ல நிகழ்வுகள் நடந்தேறியது. எனவே என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக மாறி விட்டது. நான் எழுதிய நூல்களை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டது. தினமலர் தாமரை பிரதர் மீடியா பதிப்பகம் மூலம் “வளங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர்”, பொன்சொர்ணா பதிப்பகம் மூலமாக “தவழ்ந்து வரும் தாமிரபரணி”, “பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்”, “மரம் நடும் மா மனிதர்”, “சக்தி நாதன் எனும் சகாப்தம்”, “அருள் தரும் அபூர்வ ஆலயங்கள்”, உலக களரி அடிமுறை கூட்டமைப்பின் மூலமாக “களரி அடிமுறை பாகம் &1” ( கலர்), தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” ஆகிய நூல்கள் வெளிவந்து எனக்கு நல்லபெயரை பெற்று தந்தது. தொடர்ந்து எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கு மிக்க நன்றி.
இந்த ஆண்டும் எழுத்து துறையில் நான் நிறைய சாதனை படைக்க நீங்கள் உதவி புரியவேண்டும். குறிப்பாக இன்று காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தாமிரபரணியில் கழிவு நீர் சாக்கடை கலப்பது குறித்த கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் என்னுடைய பேட்டியையும் வெளியிட்டுள்ளார்கள். வெளியிட்ட நிர்வாகத்திற்கும் நிருபர் காட்சன் விஸ்லி தாஸ் அவர்களுக்கும் நன்றி . ஆதிச்சநல்லூர் குறித்த கட்டுரையை எனது பேட்டியுடன் வெளியிட்ட தி தமிழ் திசை இந்து பத்திரிக்கைக்கு நிருபர் கோமதிக்கும் எனது நன்றி. தினகரன் நாளிதழில் எனது “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” நூலுக்கு விமர்சனம் எழுதியுள்ளார்கள். இந்த விமர்சனம் தமிழ் நாடு முழுவதும் பிரசுரமாகி உள்ளது. தினகரன் நிர்வாகத்துக்கு நன்றி. நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் நான் எழுதிய “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்” பகுதி 48&ல் அரியநாயகி புரம் கிராமம் உருவான வரலாறு என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. வெளியிட்ட நிர்வாகத்துக்கும் ஆசிரியர் தம்பான் அவர்களுக்கும் நன்றி. நான் எழுதிய “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2 211” பகுதியை மும்பையில் இருந்து வெளிவரும் வணக்கம் மும்பை வாரஇதழ் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர் ஜெயஆசீர் அவர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து எனது நூலை வெளியிட உதவும் பதிப்பகம் மற்றும் வாங்கி படிக்கும் வாசகர்கள், விமர்சனம் எழுதும் பத்திரிக்கைகள், தகவல் தரும் அன்பர்கள் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.உங்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்க வாழ்த்துகள் . நன்றி& அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


