ஆழ்வார்தோப்பு கிராமத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் அரசன் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஒன்றிய வர்த்தகப் பிரிவு செயலாளர் பாலமகேஷ், தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலப் பிரிவு பொறுப்பாளர் விநாயக சரவணன், கிளைத் தலைவர்கள் ரவிக்குமார், அருணாச்சலம் உள்ளிட்டோர் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.
இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


