செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுகூலகத்தில் கருங்குளம் ஒன்றியத்தை சார்ந்த 31 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடந்தது.
இந்த பயிற்சிக்கு கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் 31 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பாலையா பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கருத்தாளராக கலந்து கொண்டார். கிராம ஊராட்சி பயிற்றுனர் தனலட்சுமி கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு பயிற்சியினை அளித்தனர். பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பீபேகம், வெயில்முத்து மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கிரேனாப்பூ, காளியம்மாள், நிஷாமேரி, வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன்ராஜ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.


