இன்று (26 .12 .22) அன்று கருங்குளம் ஒன்றியத்தை சார்ந்த 31 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் செய்துங்க நல்லூரில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் வட்டார சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமையில், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, வட்டார கல்வி அலுவலர்* *மரிய ஜெயசீலா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சியானது ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் 31 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .பள்ளி மேலா* *ண்மைக்குழு பயிற்சி கருத்தாளராக பாலையா ஆசிரியர் பயிற்றுநர் வட்டார வள மையம் ஸ்ரீவைகுண்டம், மற்றும் கிராம ஊராட்சி பயிற்றுனர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு பயிற்சியினை சிறப்பாக* *அளித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பள்ளி மேலாண்மை குழு) கிருஷ்ணவேணி* *மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி* *ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில்* ஆசிரியர் பயிற்றுநர்கள்
பீபேகம், வெயில் முத்து மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கிரேனாப்பூ , காளியம்மாள் , நிஷா மேரி , வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஒழுங்கு செய்திருந்தார். பயிற்சி நிறைவில் கலந்து கொண்ட அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


