பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வில், மலேசிய நாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தில் உள்ளது திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆகும். இது சைவ சமயத்தின் அகச்சந்தான குரவர்களில் ஒருவரான சத்தியஞான தரிசினிகளால் நிறுவப்பட்டது. இந்த ஆதீனம் பல்வேறு சைவ சமய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆதீனத்தில் பக்தர்களுக்கு ஒவ்வொரு கார்த்திகை சோமவார தினம் மற்றும் மகா சிவராத்திரி தினங்களில் சமய தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது.
இதனை முன்னிட்டு காலையில் செங்கோல் ஆதீனத்தின் ஆன்மார்த்த மூர்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்த பக்தர்களுக்கு பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் தீட்சை வழங்கினார்.
இதில் 30 நபர்களுக்கு சமய தீ¬க்ஷயும், 4 நபர்களுக்கு விசேட தீட்சையும் வழங்கப்பட்டது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெருங்குளம் செங்கோல் ஆதீன நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


