செய்துங்கநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் கட்சியினர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் திருவரங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் எண்ணாயிரத்தான், பேச்சிமுத்து, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மருதவிநாயகம், ஊராட்சி செயலாளர் செக்காரகுடி வண்டிமலையான், சீதார்குளம் வேல்முருகன், தாதன்குளம் சுடலை, தெற்குகாரசேரி தர்மராஜ், தம்பான், அனவரதநல்லூர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


