தூத்துக்குடியில் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
புத்தக கண்காட்சியின் நான்காவது நாளை முன்னிட்டு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை அமர்வு நடைபெறுகிறது இதில் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலைத்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை அரசு குறுக்கு சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் பறையடித்து நடனமாடுதல் நிகழ்ச்சியும் முத்தையாபுரம் ஸ்பிக் மேல்நிலைப் பள்ளியில் நவீன நாடகமும் தூத்துக்குடி பி. எம். சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தெற்கத்திய நடனமும் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை குமார சித்தம்பட்டி கருப்பசாமி குழுவினரின் எருது கட்டு மேளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பொது நூலக இயக்குனரும் , இல்லம் தேடி கல்வியை சேர்ந்த சிறப்பு பணி அலுவலருமான இளம் பகவத் பேசினார். அதனைத் தொடர்ந்து தாமிரபரணியும் ஆதிச்சநல்லூம் என்ற தலைப்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , தமிழ் இசை ஓர் பார்வை என்ற தலைப்பில் எழுத்தாளர் இளமுருகும், குழந்தை இலக்கியம் இன்று என்ற தலைப்பில் எழுத்தாளர் உதயசங்கரும், தூத்துக்குடியும் விடுதலைப் போராட்டமும் என்ற தலைப்பில் நெய்தல் அண்டாவும், வ உ சி யின் பன்முகம் என்ற தலைப்பில் குழந்தை எழுத்தாளர் சூடாமணியும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மாவட்டவருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சார் ஆட்சியர் கௌரவ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


