செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1223 பேர் பங்கேற்றனர்.
சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல் துறையின் சார்பில் நடந்த தேர்வில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1223 பேர் பங்கேற்றனர். லோயர் பிரிவில் 5 பிரிவாக 754 பேருக்கும், ஹையர் பிரிவில் 4 பிரிவாக 469 பேருக்கும் தேர்வு நடந்தது.
தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் டாக்டர். ஆவுடையப்பன் பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளர்களாக துறைத்தலைவர்கள் ஃபென் மேத்யூ மற்றும் ஆறுமுக சேகர் பணியாற்றினர்.
தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி விரிவுரையாளர்கள் சந்திரசேகர், கண்ணன், அனுலா ஜானகி, சின்ன ராஜா, பொன்லட்சுமி, பிரசன்னா, கனிமொழி, மாரி ராஜ்குமார், பிரசன்னா, மாரி ராஜ்குமார், கவிதா, சுடலைமணி, பீட்டர் ஒப்பாலின், குரூஸ் அம்பரூஸ், சோமசுந்தரம், காந்தி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கண்ணன், கல்யாணி, ஆறுமுகம், மாரியப்பன், குமார், லட்சுமணன், வசந்தா ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் உயர்திரு. டாக்டர் ஸ்டீபன் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


