தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மகாலில் நாளை 22 முதல் 29 ந்தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை நாளை காலை 10 மணிக்கு கனிமொழி எம்.பி திறந்து வைத்து பேரூரையாற்றுகிறார். மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ் .கண்ணபிரான் வரவேற்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். புத்தக திருவிழாவை தொடக்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேரூரை நிகழ்த்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் ஒட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திக்குளம் மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்த்தராஜ், கோவில்பட்டி கடம்பூர் ராஜு, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் வாழ்ததுரை வழங்குகிறார்கள். கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நன்றி கூறுகிறார்.
பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாழ்க தமிழ் வாழ்க நம் தேசம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலை நிகழ்ச்சிகளும் தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் பரத நாட்டியமும் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு கடலும் கதைகளும் என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசுகிறார். நிகழ்ச்சிகளை கீழபூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் செய்து வருகிறது.


