செய்துங்கநல்லூர் திருவரங்கச்செல்வியம்மன் கோயிலுக்கு பிள்ளைமார் சமுதாயம் சார்பில் புதிய சகடை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சகடை வெள்ளோட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது. திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய வெள்ளோட்டம், கிராமம், அன்னதான சத்திரம்,மெயின் ரோடு , வி.கோவில் பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்த வெள்ளோட்டத்தில் அர்ச்சகர்கள் சுடலையாண்டி கம்பர், நாரயண கம்பர், சண்முக கம்பர், செல்லப்பா கம்பர், சுந்தர கம்பர், மந்திரம் பிள்ளை தலைமையில் சமுதாயத்தினை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டனர்.


