ஸ்ரீவைகுண்டம் வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை ஆறாம்பண்ணை ஜமாத் சார்பாக பொதுமக்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், ஆறாம்பண்ணை பள்ளிவாசல் செயலாளர் அப்துல் கனி, மக்கள் நல சங்கம் செயலாளர் செய்யது, வார்டு உறுப்பினர் இப்ராகீம், அரபாத் நகர் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் காதர், பொரு£ளாளர் இப்ராகீம், முகமது அலி ஜின்னா, துபாய்ஆசிஷ் , இளைஞரணி அப்துல் கரீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருங்குளம் பாலத்தின் அருகில் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொங்கராயகுறிச்சியில் நடந்த சினிமா சூட்டிங்கை உதய நிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிக்கு சென்று அங்கே மீன் குஞ்சுகளை தாமிரபரணி ஆற்றில் விட்டார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம் உள்பட கட்சியினர் உடன் சென்றனர்.


